சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: பிரம்மாண்ட கொலு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 07:09
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் பங்கேற்று கண்டு களித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஒவ்வொறு ஆண்டும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று துவங்கிய நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கொலுவில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி துவங்கும் நேற்றை தினம் 26 ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் தினமும் இரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். கொலுவை கண்டு களிக்கும் வகையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இதற்கான ஏற்பாட்டை பொது தீக்ஷிதர்கள் செய்துள்ளனர். சுமார் 21 அடி அகலமும், 40 அடி உயரமும். 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கொளு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. . ஒவ்வொறு ஆண்டும் நடைபெறும் கொளுவிற்காக பக்தர்களும் புதிய பொம்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.