Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி அலங்காரத்தில் ... வடபழநி ஆண்டவர் சக்தி கொலு : தமிழக கவர்னர் ரவி வழிபாடு வடபழநி ஆண்டவர் சக்தி கொலு : தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் விஜயதசமி : நம்பெருமாள் வன்னி மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் விஜயதசமி : நம்பெருமாள் வன்னி மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

05 அக்
2022
08:10

ஸ்ரீரங்கம் : நவராத்திரி உற்சவத்தின் 10ம் திருநாளான நாளை ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலையில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு , கீழக்கோட்டை வாசல் மார்க்கமாய் வெளியேறி வழிநடை உபயங்கள் கண்டருளி, காட்டழகிய சிங்கர் கோயிலில் உள்ள ரங்க மண்டபத்தில் எழுந்தருள்வார். திருவராதனம் முடிந்த பிறகு, மாலையில் தங்க குதிரை வாஹனத்தில்  ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருள்வார்.  தட்டுகாரர் என்ற கைங்கரியபரர் உடுப்புகள் தரித்து, ஸ்ரீநம்பெருமாளுடைய வில்லையும், அம்பையும், எடுத்துக் கொண்டு, ரங்க மண்டபத்தை சுற்றி வந்து ஸ்ரீநம்பெருமாளிடம் வில்லையும் அம்பையும் கொடுப்பார். வில் , அம்புடன் நம்பெருமாள் சிங்கர் சந்நதி வாசலிலுள்ள நாலுகால் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அர்ச்சகர் மற்றும் கோயில் புரோஹிதரர் இருவரும் எதிரிலுள்ள வன்னி மரத்தடியில் மரத்துக்குத் திருவாரதனம் செய்வார்கள்.  பின் அர்ச்சகர் நம்பெருமாளிடம் வந்து கையில் வில்லைப் பிடித்து நாலு திக்கும் நாலு அம்பு போடுவார்.  (விஜயதசமி அன்று தான் ஸ்ரீகிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு குருசேஷத்தர போருக்கு தேவையான அம்பு, வில் போன்ற  ஆயுதங்களை கொடுத்து வெற்றிக்கு வழி வகுத்ததாக கூறப்படுகிறது). பின்னர் ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, மூலஸ்தானத்திற்கு எழுந்தருள்வார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar