Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீர ஆஞ்சநேயருக்கு தீபதூப ஆராதனை அரசஅடி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை அரசஅடி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே மாங்குடியில் கசன் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மானாமதுரை அருகே மாங்குடியில் கசன் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 அக்
2022
11:10

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாங்குடி கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பிரகஸ்பதி மகனான கசன் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பூஜாரி சிங்கராஜா கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு ஒரு கசன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறியதாவது, இந்த கசன் என்பவர் மகாபாரதம், மச்ச புராணம், அக்னி புராணங்களின்படி தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் ஆவார், அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வருவதற்காக பிரகஸ்பதியால் அனுப்பப்பட்டவரே இந்த கசன் ஆவார். இந்த அபூர்வமான சிற்பமானது தற்போது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாங்குடி கிராமத்தில் கிடைத்திருப்பது வியப்பாக உள்ளது.

இந்த சிற்பம் 3அடி உயரத்தில் தலையின்றி காணப்படுகிறது ஒன்றரை அடி அகலம் கொண்ட பட்டையான கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் முத்து மாலையை அணிந்தவாறு தனது இடது தோளிலிருந்து மார்பு வழியாக தனது வலது இடுப்பு வரை ஒரு பட்டையான முப்புரி நூல் செதுக்கப்பட்டுள்ளது. கரங்களில் வலது கரத்தில் தாமரை மலரையும்,இடது கரத்தை தொடைமீது வைத்து நின்ற கோலத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தலை பாகங்களும்,ஒரு ஐந்து தலை நாகர் சிற்பமும் சிதைந்த நிலையில் அருகில் இருப்பதைப் பார்க்கும்போது இங்கு முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும் இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜா மற்றும் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர் கூறுகின்றனர். இது போன்ற அபூர்வமான கலைநயமிக்க முற்கால பாண்டியர் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும், ஆகவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar