Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு முத்தாலம்மன் ... கேதாரநாதர் கோயிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது கேதாரநாதர் கோயிலில் மகா ருத்ர யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையான் கோவில் கிரகணத்தால் 12 மணி நேரம் மூடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை ஏழுமலையான் கோவில் கிரகணத்தால் 12 மணி நேரம் மூடல்

பதிவு செய்த நாள்

13 அக்
2022
07:10

திருப்பதி :வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருமலையில் கிரகண காலங்களில், கோவில் நடை சாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணமும் வருவதால், ஏழுமலையான் கோவில் இந்த நாட்களில், 12 மணி நேரம் மூடப்படும். அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், ஏழுமலையான் கோவில் காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்படும்.வளாகத்தை சுற்றி சடங்குகள் செய்த பின், மீண்டும் கோவில் கதவுகள் திறக்கப்படும்.

இதேபோல், நவம்பர் 8-ம் தேதி மதியம் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நாளில், கோவில் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.இந்த இரண்டு நாட்களில், வி.ஐ.பி., பிரேக் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த இரண்டு நாட்களிலும், சர்வ தரிசன யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுவாக, கிரகண நாட்களில் அன்னதான கூடமும் மூடப்பட்டிருக்கும். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar