Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் கோவில் ... நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கொடியேற்றம் நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதாரநாதர் கோயிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேதாரநாதர் கோயிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது

பதிவு செய்த நாள்

13 அக்
2022
07:10

உலகத்தில் அமைதி நிலவவும், அனைத்து மக்களிடம் ஒற்றுமை தழைத்தோங்கவும், கேதார நாதர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என, வேதாகம பாடசாலை முதல்வர் பேசினார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த ஸ்ரீதர்ம சாஸ்தா யாத்திரை குழுவினர், உத்தரகண்ட் மாநிலம், கேதாரகவுரி உடனுறை கேதாரநாதர் கோவிலில், மகா ருத்ர யாகப் பெருவிழாவை நேற்று முன்தினம் துவக்கினர்.

இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் மங்கள இசையுடன் துவங்கின. 60 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் ருத்ர பாராயணம் செய்தனர்; பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.முன்னதாக, மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் வேதாகம பாடசாலை முதல்வர் ராஜா பட்டர் பேசியதாவது:பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், மகா ருத்ர யாகம் நடப்பது சாலப்பொருத்தம். உலக நன்மைக்காக நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.மிகுந்த சிரமத்துக்கு இடையில், அதுவும் பனி பொழியும் இமயமலை அடிவாரத்தில் நடத்துவது மிகச்சிறப்பு. இவ்வாறு அவர் பேசினார்.


கூனம்பட்டி ஆதீன திருமடம் நடராஜ சுவாமி பேசுகையில், நாம் இருப்பது அவிநாசியிலா, திருப்பூரிலா, கேதார நாத் கோவிலிலா என்பது தெரியவில்லை. அந்தளவுக்கு நம் பக்தர்கள் பங்கேற்றுள்ளது, பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்வது எல்லாமே மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

பெங்களூரு, வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் பேசுகையில், எளிதில் மகா ருத்ர யாகத்தை நடத்திவிட முடியாது. அதற்கு இறையருள் வேண்டும்; உலகத்திலுள்ள அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ்வதற்காக நடத்தப்படும் இந்த யாகத்தின் முக்கிய நோக்கம் நிறைவேற கடவுள் நிச்சயம் துணை நிற்பார், என்றார்.தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சந்திரன், நந்தகோபால், ஆறுமுகம், பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.--நமது நிருபர்-

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar