ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2022 12:10
ராமநாதபுரம்: புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.
நேற்று கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. இதே போல் வழிவிடு முருகன்கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டிணம் பால சுப்பிரமணியர் சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில்கள் மற்றும் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் நடந்த அபிேஷக பூஜைகள், அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.