Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் ... சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை வழிபாடு விநாயகர், முருகருக்கு சிறப்பு ஆராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2022
07:10

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், புரட்டாசி மாத கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முருகப்பெருமான், வேடன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பொள்ளாச்சி, திப்பம்பட்டி பூங்கா நகர் சிவசக்தி கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றன. திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், வலம்புரி விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. விநாயகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவில், தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரம், வழிபாடு நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை பூஜை நேற்று மாலை, 6:30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு 7:50 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜையை முன்னிட்டு, விநாயகருக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு வழிபாட்டில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது- நிருபர் குழு -.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar