Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி கடைசி சனி பெருமாள் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருமலை திருப்பதி பட்டு சாற்றல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

15 அக்
2022
08:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடந்தது.

நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீரி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்ரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா நேற்று நடந்தது. மூலவர் சுப்ரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பொதுபூஜை முடிந்து, கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறையின் அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து கோயில் சிவாச்சாரியார்கள் வேலை சுனை தீர்த்தத்தில் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியிலான கதம்பு சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு இரவு வேல் மற்றும் சுவாமிக்கு அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தது. பின்பு பூ பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மூலவர் சுப்ரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar