உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2022 08:10
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 4ம் சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 4ம் சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. அதனையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.