Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

17 அக்
2022
08:10

நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(அக்.,17) மாலை திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்தி தேர்வு நாளை காலை நடக்கிறது.

இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி, நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதிேஹாமம் நடைபெறும்.

7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்கள். இந்நிலையில் அக்.22 இரவு வரை பூஜைகள் நடைபெற்று 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக். 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அக். 25 பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ.16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar