Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் துலா உற்சவம் நாளை ... அமாவாசை அன்று சூரிய கிரஹணம் எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்? அமாவாசை அன்று சூரிய கிரஹணம் எப்போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

18 அக்
2022
07:10

நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைபுரத்து மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்,

நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தாலும் பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி, நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் கணபதிேஹாமம் நடக்கும். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைபுரத்து மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வர். அக்., 22 இரவு வரை பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்., 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 25 ல் பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். மேல்சாந்தி தேர்வு இன்று நடந்தாலும் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த தேர்வை கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar