Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை திருநேர்த்தி அம்மன் ... மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் : குவிந்த பக்தர்கள் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை திருச்செந்தூரில் சம்ஹாரம் ஜெயந்திநாதர்
எழுத்தின் அளவு:
ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை திருச்செந்தூரில் சம்ஹாரம் ஜெயந்திநாதர்

பதிவு செய்த நாள்

30 அக்
2022
04:10

தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடக்கிறது. கடந்த 25ம் தேதி விழா யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. 5ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. 12:00 மணியளவில் தீபாராதனையும்,12:45 மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்யங்கள் முழங்க சண்முக விலாசம் வந்து சேர்ந்தார். மாலையில் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு அபிஷேக அலங்காரமாகி கிரி வீதி உலா நடந்தது.


6ம் திருநாளான இன்று 30ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். மாலை கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நாளை அக்.31ல் 7ம் திருநாளன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து நவ.5ம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் விழாக்கோலம் காண்கிறது. திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தூத்துக்குடி, மதுரை, நெல்லை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போலீசார், ஊர்க்காவல் படையினர் என 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar