Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை முருகன் கோவில்களில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூரசம்ஹாரம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

31 அக்
2022
08:10

தஞ்சாவூர்,- சுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24ம் தேதி தொடங்கியது.

26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி புறப்பட்டு அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 31-ம் தேதி காலை 10 மணிக்கு சண்முகர் சுவாமி புறப்பாடும், காவிரியில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம்,

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் விழாவும், 3-ம் தேதி இரவு 8 மணிக்கு தேவசேனா திருக்கல்யாண பல்லக்கு வீதியுலாவும், 4-ம் தேதி இரவு சண்முகசுவாமி யதாஸ்தானம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar