சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2022 11:10
சென்னை : சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடந்தது.
சென்னை வடபழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று (30ம் தேதி) இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 31ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவ., 1ல் வடபழநி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2ம் தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3ம் தேதி வடபழநி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4ம் தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் எல். ஆதிமூலம், செயல் அலுவலர் முல்லை ஆகியோர் செய்திருந்தனர்.