Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னி மரியா பிறப்பு பெருவிழா ... 512 ஆண்டு பழமையான கோவிலில் "கோ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓங்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
10:08

ஈரோடு: ஈரோடு கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, 10 மணிக்கு, அம்பிகையிடம் உத்தரவு பெறுதல் நடந்தது. 10.30க்கு விக்னேஸ்வரர் பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை, 5 மணிக்கு மங்களஇசை, விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாஜனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது.இன்று காலை, 8 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மங்களஇசை, விஷேச சந்தி, பூதசுத்தி, கோபுரகலசங்கள் வைத்து பூஜித்தல், திரவ்யாகுதி நடக்கிறது.நாளை காலை, 8 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, விநாயகர், பாலமுருகன், நவக்கிரஹங்கள், ஓங்காளியம்மன் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.மாலை, 5 மணிக்கு ஐந்தாம் கால ஹோம பூஜை, விநாயகர் வழிபாடு, வேதபாராயணம், தத்வஅர்ச்சனை, ஐந்தாம்கால ஹோமபூஜை, தீபாராதனை நடக்கிறது. வரும், 29ம் தேதி கும்பாபிஷேக விழாவன்று, அதிகாலை, 5 மணிக்கு, ஆறாம் கால யாகபூஜை ஆரம்பம், விநாயகர் வழிபாடு, நாடிசந்தனம், ஸ்பர்ஷாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 6 மணி முதல் 7.30க்குள், கோபுரகலசம், ஓங்காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. கோட்டை ஓங்காளியம்மன் கோவில் கமிட்டி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மலர்அங்கமுத்து, சம்பத்குமார்,குப்புராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09 ல் ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தில் 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar