Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப ... சதுரகிரியில் தொடரும் மழை; பக்தர்களுக்கு தடை சதுரகிரியில் தொடரும் மழை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவித்தபடி 2 ஆண்டுகளில் நடக்குமா?
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அறிவித்தபடி 2 ஆண்டுகளில் நடக்குமா?

பதிவு செய்த நாள்

03 நவ
2022
08:11

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாததால் அறிவித்தபடி 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இக்கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. 4 ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 2 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யாமல் இருந்ததே காரணம். ஒருவழியாக திருப்பூர் வேல்முருகன் என்பவருக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்தாண்டு ஜன., 21ல் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தி, 2 ஆண்டுகளில் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என அறிவித்தார். கோயிலில் அனைத்து திருப்பணிகளும் முடித்த பிறகே கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி. இக்கோயில் கும்பாபிேஷகம் கடந்தாண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் துவங்காததால் கும்பாபிஷேக திருப்பணிகளும் துவங்கப்படவில்லை.

நாமக்கல் மாவட்ட குவாரியில் இருந்து கற்களை மதுரைக்கு எடுத்து வர கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அம்மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படாததால் ஒவ்வொரு துறையிலும் அனுமதி பெற கோயில் நிர்வாகம் போராட வேண்டியிருக்கிறது. ஒரு துறை அனுமதி பெற்றால், அடுத்த துறையின் அனுமதி அதற்குள் காலாவதியாகி விடுகிறது. இதுபோன்ற நிர்வாக குளறுபடியால் மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 5 ஆண்டுகளானாலும் கும்பாபிஷேகம் நடத்த வாய்ப்பு இருக்காதோ என்ற மனநிலைக்கு பக்தர்கள் ஆளாகி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar