Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோவில் மஹா ... பகவதியம்மாள்புரத்தில் வெற்றி வேல் முருகனுக்கு ஆராட்டு விழா பகவதியம்மாள்புரத்தில் வெற்றி வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்த பெண்கள்
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்த பெண்கள்

பதிவு செய்த நாள்

04 நவ
2022
01:11

அவிநாசி: அவிநாசி அடுத்த நம்பியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 500ம் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 500ம் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனையடுத்து இன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜைகள் தொடங்குகின்றது. நாளை இரண்டாம் கால யாக பூஜையில் பூத சுத்தி வழிபாடு, திரவ்யயாகம், வேதிகார்ச்சனை நடைபெற்று கோபுர கலசங்கள் வைத்தல், மாலையில் லலிதா சகஸ்ரநாமம், திரவ்யாகுதி, தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்று அஷ்டபந்தன மருந்து சாற்றி சுவாமி சிலை பிரதிஷ்டி செய்தல் நடைபெறுகின்றது. அதன் பின்னர் திங்கள் காலை நான்காம் காலை யாக பூஜையில் மகாபூர்ணகுதி, தீபாரதனை, யாத்ரா தானத்துடன் சித்தி விநாயகர் மாரியம்மன் விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்கார தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இரவு 8 மணிக்கு கிராமிய கலையான சிங்கை வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.மகா கும்பாபிஷேக விழாவினையடுத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar