Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய பக்தர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடிநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணிப்பூர் கவர்னர் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார்
எழுத்தின் அளவு:
மணிப்பூர் கவர்னர் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார்

பதிவு செய்த நாள்

05 நவ
2022
06:11

மயிலாடுதுறை: சீர்காழி கிளை மடத்தில் பன்னிரு திருமுறை மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்த மணிப்பூர் கவர்னர் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோவில் அருகே உள்ள தருமபுரம் ஆதீன கிளை மடத்திற்கு இன்று மதியம் மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.  அவரை சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி கிளை மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீன 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது கவர்னர் இல.கணேசனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறு பதிப்பு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள்,  வைத்தீஸ்வரன் கோவில் சுவாமிநாதன்,  சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து  கவர்னர் இல.கணேசன் தேவார பாடசாலை மாணவர்கள் மற்றும் கோவில் சிற்பந்திகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar