Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னிக்க முடியாத பாவம் எது? சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ஏன்? சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ...
முதல் பக்கம் » துளிகள்
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

பதிவு செய்த நாள்

06 நவ
2022
11:11

ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தருவதுண்டு. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி பௌர்ணமியில் விரதமிருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும். அதனால் தான் முழு நிலவு தினங்களில் சிறப்பான வழிபாட்டு முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar