Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விடுமுறை தினத்தில் நவபாஷாணத்திற்கு ... பழநி சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு பழநி சிவாலயங்களில் சனி பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பகுதி சிவாலயங்களில் ஐப்பசி சனி பிரதோஷ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் பகுதி சிவாலயங்களில் ஐப்பசி சனி பிரதோஷ விழா

பதிவு செய்த நாள்

06 நவ
2022
04:11

நத்தம், நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத சனி பிரதோஷ விழா பூஜைகள் நடந்தது.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷ விழா பூஜையில் நந்தீஸ்வரருக்கு பால், பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், விபூதி ,புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் நத்தம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைப்போலவே அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து வழிபட்டனர். சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோவிலில் ஐப்பசி சனி பிரதோஷ விழாவையொட்டி 1008 சிவலிங்கங்களுக்கும் புஷ்பங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷ விழாவையொட்டி சிவசக்தி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. கணவாய்பட்டி பங்களா சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar