Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் ... ஜம்புலிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சிறப்பு பூஜை ஜம்புலிப்புத்தூர் சக்கரத்தாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமையான தவ்வை கண்டுபிடிப்பு: தமிழகத்தின் தாய் தெய்வம்
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமையான தவ்வை கண்டுபிடிப்பு: தமிழகத்தின் தாய் தெய்வம்

பதிவு செய்த நாள்

09 நவ
2022
08:11

மதுரை: மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையை மதுரை பாண்டியர்கள் தேடி பயண குழுவின் தொல்லியல் ஆய்வாளர்கள் மதன், மணிகண்டன், அறிவுசெல்வம், தேவி கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: தவ்வை தமிழகத்தில் கி.பி. 7ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை வழிபட்ட தாய் தெய்வம். ஜேஷ்டா தேவி, மூதேவி, அலட்சுமி என்றும் அழைக்கப்படுவர். இவர் லட்சுமி தேவியின் மூத்த சகோதரி. தவ்வையை மூலவராக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இல்லை. தனியாகவும், மகன், மகளுடனும் ஒரே பீடத்தில் அமைத்து வழிபட்டுள்ளனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் சிலையை வைத்துள்ளனர். செல்லப்பனேந்தலில் 2 அடி உயரம் 3.5 அடி நீளபலகை கல்லில் தவ்வை தன்மகன் மாந்தன், மகள் மாந்தியுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். முகம் முற்கால பாண்டியர் கால பாணியில் உள்ளது. இந்த தவ்வை சுகாசனத்தில் வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தன் தொடையில்வைத்து, பின் கொண்டையுடன் அமர்ந்துள்ளார்.முழு ஆடை உடுத்தி கீழே பார்த்தபடி உள்ளார். வலதுபுறம் மகன் மாந்தன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கை சிதைந்துள்ளதால்அதுகுறித்த குறிப்புகளைஅறிய முடியவில்லை. இடதுபுறம் மகள் மாந்தியும்அமர்ந்த கோலத்தில் கொண்டை, கழுத்து அணிகளுடன், வலது கையில் மலர் பிடித்து, இடது கையை தொடையில் வைத்தும் செதுக்கப்பட்டுள்ளார். தவிர, மதுரை தெற்குமாசி வீதி தென்னோலைக்காரத் தெருவேப்ப மரத்தடியில் குன்று கல்லில் 16ம் நுாற்றாண்டின் நடுகல் வீரர் சிலையை எங்கள் குழுவைச் சேர்ந்த முனிராஜ் குணா கண்டுபிடித்தார். இந்த சிலை முத்துகருப்பசாமி என்ற காவல் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar