Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகுமலை கைலாசநாதர் கோவிலில் ... ராம ராஜ்ஜிய ரத யாத்திரை.. மதுரை வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை.. மதுரை வந்தது
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் மாவட்ட கோவில் சிலைகள்: அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் மாவட்ட கோவில் சிலைகள்: அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 நவ
2022
01:11

சென்னை: திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம், ஆலத்துாரில் விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அதே மாவட்டத்தில் உள்ள, வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. சோழர் காலத்தைச் சேர்ந்த இச்சிலைகளை மர்ம நபர்கள், 50 ஆண்டுகளுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, 2017ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து, சிலைகளைத் தேடி வந்தனர். பின், இந்த வழக்கு, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இப்பிரிவு போலீசார், தமிழக கோவில்களில் இருந்து திருடு போன சிலைகள் குறித்த புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, விஸ்வநாத சுவாமி கோவிலில் சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலைகளின் படங்கள், புதுச்சேரியில் இருப்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள், அமெரிக்காவில் உள்ள, அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அங்கு வசிக்கும் தன்னார்வலர் ஒருவர் வாயிலாக, சிலைகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தலைமையிலான போலீசார், விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகளை, தமிழக கோவிலில் இருந்து தான் திருடி கடத்தப்பட்டது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருகின்றனர். இதன் வாயிலாக, சிலைகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar