ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2022 10:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் மகாதேவாஷ்டமி பூஜைகள் சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 06:00 மணிக்குமேல் வைத்தியநாத சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் ஜெப பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகளை ரகுபட்டர் செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடும், அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.