Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை, சிருங்கேரி சாரதாம்பாள் ... தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சாரதாதேவி பாலர் சங்கம் வகுப்புகள் தொடக்கம் தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

19 நவ
2022
06:11

திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப்பொருள் நாயனாரின் 19 வது குருபூஜை விழாவில் சிவனடியார்கள் கலந்து கொண்டு இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.


நாயன்மார்கள் 63 வரில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் மெய்ப்பொருள் நாயனார். திருநீற்று செல்வர் என போற்றப்பட்ட இவர் திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இவருக்கு சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், 19 வது குருபூஜை விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாகத்தில் அமைந்துள்ள மூலவர் திருமேனிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 9.00 மணிக்கு செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றிவைத்தார். திருவண்ணாமலை ஜீவா அம்மாள், புதுவை தணிகாசலம், எலந்தம்பட்டு அருணாச்சலம் ஐயா, விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர் ஜி முன்னிலை வகித்தனர். அம்பாள் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்தனர். மாலை 3:00 மணிக்கு சிவனடியார்கள் திருமுறைப் பாடல், பரனூர் அம்பலவாணன், வேட்டவலம் விஸ்வநாதன், திருக்கோவிலூர் கண்ணன் மெய்ப்பொருள் நாயனார் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். மாலை 6:00 மணிக்கு ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடந்தது‌. மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்ற செயல் தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar