Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷா யோகா மையத்தில் கார்த்திகை ... நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம்

பதிவு செய்த நாள்

07 டிச
2022
05:12

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் மலைக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது‌

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.30 சாயரட்சை பூஜையில் மூலவர், சண்முகர், சின்ன குமாரசுவாமி காப்பு கட்டுதலுடன் துவங்கி, தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, தீபாதரணை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

டிச.5., ல் சாயரட்சை பூஜைக்கு பின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தினமான நேற்று (டிச.6.,) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4:30 மணிக்கு விளா பூஜை நடை பெற்றது. மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் பயன்படுத்தினர். குடமுழுக்கு நினைவரங்கம் வழியை மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்கள் மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரோப்கார், வின்ச் வழக்கம் போல் இயங்கியது. மலைக்கோயிலில் மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4:45 மணிக்கு சின்னகுமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு இன்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகாதீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. காலை முதல் கிரிவீதி, சன்னதி வீதி மலைக்கோயில் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar