Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் சாரதா சேவா சங்கத்தில் ... திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவிலில் ஐயப்பா மண்டல பூஜை திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில்களில் ஜன. 6 அன்று ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
சிவன் கோயில்களில் ஜன. 6 அன்று ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

19 டிச
2022
08:12

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், சிவன் கோயில்களில் ஜன., 6 அன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.

*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், டிச., 28 அன்று மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. அன்று தொடங்கி தினமும் காலை, மாலை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை வாசிக்கப்படும்.

தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகர் ஆடி வீதியில் வலம் வருவார். ஜன., 5 இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிவகாம சுந்தரி, நடராஜர் மூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடு நடைபெறும்.

அன்று இரவு 8:00 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவம் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணி தொடங்கி, சிறப்பு ஹோமங்கள் நிறைவடைந்து, ஆருத்ரா மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்க உள்ளது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு சிறப்பு தீப ஆராதனைகள் நடக்கும்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கும் விழா, தொடர்ந்து ஜன., 5 இரவு ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியும், மறுநாள் காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்க உள்ளது.

*இதேபோல் எமனேஸ்வரத்தில் எமன் ஈஸ்வரனை பூஜித்த எமனேஸ்வரமுடையவர் கோயில் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar