Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பனுக்கு பாலாபி ஷேகம் செய்ய சபரிமலை தொழுவத்தில் 15 பசுக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2022
04:12

சபரிமலை : ஐயப்பனுக்கு பாலாபிேஷகம் செய்ய சபரிமலை தொழுவத்தில் 15 பசுக்கள் வளர்கிறது. இவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சபரிமலையில் தினமும் அதிகாலை நடை திறந்ததும் ஐயப்பனுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிேஷகம் செய்யப்படும். அதன் பின்னரே நெய்யபிேஷகம் தொடங்கும். தினசரி பால் கொண்டு வருவது சிரமம் என்பதால் கோயிலுக்கு பின்னாலேயே பசுக்கள் வளர்க்கப்படுகிறது. பக்தர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பசுக்களை வழங்கியதோடு அதற்கு தேவையான வைக்கோல் உள்ளிட்ட உணவுகளையும் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது இங்கு 15 பசுக்கள், எட்டு காளைகள், நான்கு பசுக்கன்றுகள் உள்ளன. இதில் நான்கு பசுக்கள் பால் சுரக்கிறது. இதை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் சாமந்தா என்பவர் பராமரித்து வருகிறார். தினமும் அதிகாலை 1:30 மணிக்கு குளித்து தயாராகி பால் கறந்து 3:00 மணிக்குள் ஐயப்பனுக்கு அபிேஷகத்துக்காக கொண்டு கொடுக்கிறார். தினமும் பசுக்களை குளிப்பாட்டி, உணவு கொடுத்து தொழுவத்தை சுத்தம் செய்து ஓய்வில்லாமல் உழைக்கும் இவர் ஐயப்பனுக்கு இப்படி ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது வாழ்வின் பாக்கியம் என்கிறார். கேரளாவில் கட்டுமான பணிக்காக வந்த இவர் ஒரு பக்தர் மூலம் சபரிமலை வந்தார். பசுக்களுடன் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு விட்டு செல்லும் ஆறு ஆடுகள், 25 கோழிகளும் இவரது பராமரிப்பில்உள்ளன. வாயில்லா ஜீவன்களான இவை காட்டு விலங்குகளுக்கு இரையாகாமல் பாதுகாத்து வருகிறார். சீசன் காலத்தில் மட்டும் தொழுவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar