Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹனுமன் ஜெயந்தி: ஞானபுரீ விஸ்வரூப ... திருப்பூர், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா திருப்பூர், மேட்டுப்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கி.பி. 9ம் நுாற்றாண்டின் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கி.பி. 9ம் நுாற்றாண்டின் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

23 டிச
2022
08:12

பெருங்குடி: மதுரை செக்காணூரணியில் 9ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்று துறை தலைவரும், பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் கொண்ட குழு பன்னியான்மலை கணவாய் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சந்திராபாளை சிற்பம் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில்: பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டு முறை இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை. அதன் பிறகு பஞ்சபூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருளாக பாவிக்கப்பட்டுள்ளன. இதான் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாக பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

கொற்றவை பற்றி தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமாக தொல்காப்பியத்திலும், இலக்கியங்களிலும் பழையோள் காணாமற் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தாலும் கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகார காவியமே ஆகும். செக்காணூரணியிலிருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோயில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை கற்சிலை கண்டறியப்பட்டது. இச்சிற்பம் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறாள் கொற்றவை. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலான முகம் தேய்மானத்தோடு காணப்படுகிறது. இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள், கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் வளையல்கள் அணிந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறாள். கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. தன் கரங்களில் பிரயோக சக்கரம், சங்கு ஏந்தியும், வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மிக பிரம்மாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில் நான்கு கைகளோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் கொண்டு இருப்பதால் சதுர் பூஜ துர்க்கை என்று அழைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் பள்ளி மடத்தில் இச்சிற்பத்தை போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அந்த சிற்பம் இரண்டாம் வரகுண பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை. கொற்றவை உருவமைதி பொறுத்து கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் முற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஐந்தாம் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா ... மேலும்
 
temple news
பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar