Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் ... வராகி அம்மன் கோயிலில் தேங்காய் தீபமிட்டு பெண்கள் வழிபாடு வராகி அம்மன் கோயிலில் தேங்காய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாலப்பந்தல் சிவன் கோவிலில் அரசர் சிலைகள்
எழுத்தின் அளவு:
திருப்பாலப்பந்தல் சிவன் கோவிலில் அரசர் சிலைகள்

பதிவு செய்த நாள்

28 டிச
2022
06:12

திருக்கோவிலூர்: திருப்பாலப்பந்தல் சிவன் கோவிலில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சிலைகள் 13ம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் சிலைகள் எனத் தெரியவந்துள்ளது.

திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் கிராமத்தில் பழமையான திருநாகீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆய்வு செய்து கூறியதாவது: திருநாகீஸ்வரர் கோவிலும்,அதன் சுற்றுப்பகுதியிலும் சோழர்காலம் முதல் விஜயநகர காலம் வரையிலான 42 கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. இவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கையில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு மன்னர்கள் காலங்களில் திருநாகேஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட திருப்பணிகளை இக்க கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் சூரியதேவன், எதிரிகள் நாயகன், சோழகங்க தேவன் எனும் பெயர்களால் அழைக்கப்படும் சூரியன் நீரேற்ற பெருமாள். எலவனசூர்கோட்டையைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தவர் கிளியூர் மலையமான் வழித் தோன்றல். மற்றொருவர் பொன்பரப்பினான் ராசராச தேவனான மகதேசன். சேலம் மாவட்டம் ஆறகளூரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தியவர். இவரது தாயார் புண்ணியவாட்டியின் சொந்த ஊர் திருப்பாலப்பந்தல் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலை ஆய்வு செய்தபோது, பலகை கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும், தனிக்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும் இருப்பது கண்டறியப்பட்டது. கைகளைக் கூட்டி வணங்கிய நிலையில் நின்று இருக்கும் இந்த சிற்பங்கள் சூரியன் நீரேற்ற பெருமாள், மகதேசன் ஆகியோருக்கு உரியதாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட இந்த சிற்பங்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் இவ்வாறு செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar