Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணன் அலங்காரத்தில் ... 10 கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கம் 10 கோவில்களில் அன்னதான திட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் ஆராதனை : கலைஞர்கள் இசையஞ்சலி
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை : கலைஞர்கள் இசையஞ்சலி

பதிவு செய்த நாள்

11 ஜன
2023
11:01

தஞ்சாவூர்: திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு 176 வது ஆராதனை விழா கடந்த ஜன.6ம் தேதி துவங்கியது. தொடர்ந்து இன்று (11ம் தேதி) ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான, பஞ்சரத்ன கீர்த்தனையை யொட்டி, காலை 5: 30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்ச விருத்தி பஜனை பாடியபடி, சாலை வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர்.

விழா பந்தலில் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன. பிறகு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஸாதிஞ்சநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ராக நகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். முன்னதாக, விழாவில் ஏ.கே., பழனிவேல் வரவேற்புரையாற்றினார். தியாக பிரம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலை வகித்தார். கவர்னர் ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar