Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்கடஹர ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேகளீச பெருமாள் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேகளீச பெருமாள் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார்

பதிவு செய்த நாள்

11 ஜன
2023
03:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக இராபத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை தொடர்ந்து, இராப்பத்து உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவின் 9ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபத மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. தேகளீச பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். சிறப்பான இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar