Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அஷ்டமி வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் திருவூடல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் திருவூடல் விழா

பதிவு செய்த நாள்

16 ஜன
2023
02:01

திருவண்ணாமலை: மனிதனின் இல்லற வாழ்வில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று(ஜன.,16) திருவூடல் விழா நடக்கிறது.

அருணாசலேஸ்வரர் காட்சி தர வேண்டி, பிருங்கி மகரிஷி, அருணாசலேஸ்வரரை மட்டும் நினைத்து தவமிருந்த நிலையில், அவருக்கு காட்சி தர அருணாசலேஸ்வரர் செல்ல, இதை பராசக்தி அம்மன் தடுக்க, அதையும் மீறி அருணாசலேஸ்வரர் சென்றார். இதனால் பராசக்தி அம்மன், அருணாசலேஸ்வரர் இருவரிடையே திருவூடல் ஏற்படும். இருவரையும் சமாதானம் செய்ய சுந்தரமூர்த்தி நாயனார் ஈடுபட்டு, முயற்சி தோல்வியடைந்து, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க அருணாசலேஸ்வரர் செல்வார். செல்லும் வழியில் குமரக்கோவிலில் தங்குவார். அப்போது வழியில் கொள்ளையர்களிடம் நகையை பறிகொடுத்து விடுவார். பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்ததால் தான், நகையை பறிகொடுத்ததாக, பராசக்தி, அருணாசலேஸ்வரரிடம் கூறுவார். பின் இருவரும் சமாதானமாகி, மறுவூடல் நடக்கும். சுவாமி நகை பறிகொடுத்ததை அறிந்த பிருங்கி மகரிஷி, தன் தவறை உணர்ந்து, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மனை சேர்த்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை, நினைவு கூறும் வகையில், ஊடலுக்கு பின் கூடல் என்பதை விளக்கும் வகையில் ஆண்டுதோறும், திருவூடல் விழா, மறுநாள் மறுவூடல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று திருவூடல் திருவிழா நடக்கிறது. இன்றிரவு குமரக்கோவிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, நாளை, கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதை காணும் தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar