Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... திருப்போரூரில் 1,008 பால்குட விழா கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் வெள்ளம் திருப்போரூரில் 1,008 பால்குட விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
60 ஆண்டாக பொங்கல் பண்டிகை கொண்டாடாத எட்டு கிராம மக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
60 ஆண்டாக பொங்கல் பண்டிகை கொண்டாடாத எட்டு கிராம மக்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
09:01

வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கடந்த, 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.

வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனுார்புதுார், தட்டான்குட்டைபுதுார், ஆலங்காடுபுதுார், உடும்பத்தான்புதுார், தாசன்புதுார் ஆகிய, எட்டு கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இந்த கிராமங்களில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன், நிலச்சுவான்தாரர் ஒருவர் பொங்கல் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியதாகவும், அப்போது ஊரில் உள்ள பெரும்பான்மையோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மனிடம் முறையிட்டனர். அப்போது, அங்குள்ள ஒருவர் அருள்வாக்கு கூறியபோது, பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளது. இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம் எனவும் கூறியதாகவும் இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, கிராம மக்கள் நலமாக இருக்கவும், கால்நடைகளுக்கு எந்த நோயும் வராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த எட்டு கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்து பின்பற்றி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar