Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... கிரிவலப்பாதை பச்சையம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
சிவாலயபுரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 ஜன
2023
10:01

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில், இன்று தை மாதம் தேய்பிறை  குரு வார பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். சர்வ அலங்காரத்தில் பிரதோஷ மூர்த்திகள், சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன், பக்தர்கள் பாடல்கள் பாட ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியில்  கோட்டப்பட்டியைச் சேர்ந்த சிவ.செல்வம் - சிவ.S.மீனா, சிவ. S.சங்கர் - சிவ.S.மீனா, சிவ.S.சதீஷ் - சிவ.S.கலைவாணி, சிவ. S.சரவணன் - சிவ.S. சசிரேகா, குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  சர்க்கரைப் பொங்கல், சுண்டல்,  அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar