Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின் விளக்கு அலங்காரத்தில் ... சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:01

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பத்ர தீபத் திருவிழா நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரத்து எட்டு தீபங்களை பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, கோயில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

இதேபோல, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தர்ப்பணம்:தை அமாவாசையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலை 4.30 மணியில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இதேபோல, கயத்தாறு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமேஸ்வரர் கோயில் முன்புள்ள சிற்றாறிலும் திரளானோர் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் மரகத நடராஜருக்கு இன்று (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு  ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம்- உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆடல் வல்லானுக்கு 32 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar