Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டிபட்டியில் தை அமாவாசை விழா தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்தனர் பக்தர்கள் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2023
07:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜன. 31ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழா துவங்கும் வகையில் நேற்று முன்தினம் மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலிநாயகர் முன்பு ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடிக்கம்பத்தில் சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு, தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது.

 கொடி கம்பத்தின் அடிப்பாகத்தில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி: திருவிழா நடக்கும் ஜன. 31 வரை தினம் காலையில் சிம்மாசனம், தங்கச்சப்புரம், சப்பரம், மாலையில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், ரிஷபம், ரத்தின சிம்மாசனம், புஷ்பம், விடையாத்தி சப்பரம், பச்சைக் குதிரை, தங்க குதிரை வாகனங்களில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிப்பர். தேரோட்டம்: திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக ஜன. 30அன்று தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி முடிந்து 16 கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜன. 31 காலையில் ஜி.எஸ்.டி. ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுப்பிரமணிய சுவாமி மட்டும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார லீலை நடைபெறும். கோயில் கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கொடி பட்டம் நேற்று கோயில் யானை தெய்வானை மீது வைத்து ரத விதிகளில் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar