Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... மேலத் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் தேர் திருவிழா மேலத் திருப்பதி வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்தனர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்தனர் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 ஜன
2023
07:01

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தை மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தினால் மேல்மலையனூர் கோவில் அருகே செல்ல முடியாதபடி முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் விழுப்புரம் கலெக்டர் மோகன் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar