Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறையில் இறைவன் திருஞானசம்பந்தருக்கு பொற்காசு வழங்கும் ஐதீக நிகழ்வு
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறையில் இறைவன் திருஞானசம்பந்தருக்கு பொற்காசு வழங்கும் ஐதீக நிகழ்வு

பதிவு செய்த நாள்

23 ஜன
2023
06:01

மயிலாடுதுறை: திருவாவடுதுறை கோமதீஸ்வரர் கோவிலில் இறைவன் திருஞானசம்பந்தருக்கு பொற்காசு வழங்கும் ஐதீக நிகழ்வு ஆதீன குரு மகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் தேவார  பாடல் பெற்ற  அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான  கோமுக்தீஸ்வரர் கோவிலில்  திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தபோது அவரது தந்தை சிவபாத இருதயர் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார். இதனையடுத்து திருஞானசம்பந்தர், கோமுக்தீஸ்வரரை வேண்டி உலவாக்கிழி பதிகம் பாடி 1000 பொற்காசுகள் பெற்றதாக ஐதீகம்.

இந்த ஐதீக விழாவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் தை ரத சப்தமி பெருவிழாவின் 5ம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இக்கோவிலின் ரதசப்தமி பெருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாள் திருவிழாவான இன்று, திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர்  பல்லக்கில் எழுந்தருள ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகம் பாடினார். தொடர்ந்து சுவாமி சன்னதியில் இருந்து பூதகனம்  பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது. இதனையடுத்து திருஞானசம்பந்தருக்கு சுவாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பர்மாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு ரூ.5ஆயிரம் அடங்கிய பொற்கிழியை குரு மகா சன்னிதானம்  அளித்து ஆசி வழங்கினார்.  ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சுவாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகாச ன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar