Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை ... நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவம் நான்குநேரி வானமாமலை பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலை முருகன் கோயிலில் முதல் கால யாக வேள்வி பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி மலை முருகன் கோயிலில் முதல் கால யாக வேள்வி பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
08:01

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,27 ல் நடக்க உள்ளதை முன்னிட்டு நேற்று வேள்விச்சாலை பூஜைகள் துவங்கின.

பழநி கோயில் படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26 மூலவருக்கு ஜன.27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று (ஜன.,23) காலை 6:00 மணிக்கு சூரிய ஒளியிலிருந்து நெருப்பு எடுக்கப்பட்டு பிரகாரம் வழியாக வேள்வி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 9:00 மணிக்கு மலைக்கோயில் படிப்பாதை, உபகோயில் சன்னதிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தல் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், கோயில் இணை ஆணையர் நடராஜன் கலந்து கொண்டனர்.

மாலை 6:30 மணிக்கு கருவறை நிறைகுடங்கள் அலங்கரித்தல், ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக் கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி, தெய்வானை, சண்முகர், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி சன்னதி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் கோயிலின் குடங்களை அலங்கரித்து கருவறை அருள் சக்தி குடங்களில் எழுந்தருள, கருவறையிலிருந்து வேள்விச்சாலைக்கு குடங்கள் எழுந்தருள செய்தல் நடந்தது. பின் முதல் கால வேள்வி துவங்கியது. ஜன., 27வரை மூலவர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வேள்விச் சாலையில் அருட்சக்தியை தரிசிக்கலாம். இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை வேள்விச்சாலையில் நடக்கும். இதனுடன் கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுறை முற்றோதல், காலை 11:45 மணிக்கு நிறைவேள்வி நடக்கிறது. முதல் கால யாக வேள்வி துவங்கிய நிலையில் நேற்றிரவு பழநியில் சாரல் மழை பெய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar