Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் ... வடபழநி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் விழா : முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் வடபழநி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரியை கொண்டாட 5 கோவில்களுக்கு தனி குழு
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரியை கொண்டாட 5 கோவில்களுக்கு தனி குழு

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
11:02

 சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஐந்து சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட, கண்காணிப்புக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா, பிப்., 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா, வெகு விமரிசையாக நடத்தப்பட உள்ளது. விழாவை சிறப்பாக நடத்த, கோவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, ஐந்து கோவில்களுக்கும் தலா, மூன்று சிறப்பு அலுவலர்கள் இடம்பெற்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரிகள் உள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள், பிப்., 17, 18ம் தேதி, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டுஉள்ளார். விழாவை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு மதிப்பெண்கள் வழங்க, ஒவ்வொரு கோவிலுக்கும் தலா, மூன்று அலுவலர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவிலும், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், பிப்., 18ம் தேதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களுக்கு சென்று, விழாவை கவனித்து, மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த அறிக்கையை, கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar