Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ... பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா : மயான பூஜை
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா : மயான பூஜை

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
09:02

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது.

 திருவிழாவின்  முக்கிய நிகழ்வான மயான பூஜை ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் நடு இரவு நள்ளிரவில்  நடைபெற்றது. இதில் சயன ரூபத்தில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவம், ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைக்கப்பட்ட அம்மனின் உருவத்திற்கு பட்டுப் புடவை போர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அம்மனின் திரு உருவத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் காவலாக நிற்கும் மகாமுனி,காட்டு முனி, கடுஞ்செழியன், பேச்சி முனி போன்ற தெய்வங்களுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.ஆழியார்  ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டதை அடுத்து ,திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மாலை சேலை  அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பம்பை காரர்கள் பம்பை அடித்தபடியே மாசாணி அம்மனின் மயான தோற்ற கதையை அங்கு உள்ளவர்களுக்கு கூறும்பொழுது, அருள் வந்த அருளாளி அம்மனின் மணல் உருவத்தை கலைத்து, சூலாயுதத்தை எடுத்து, வாயில் எலும்பு துண்டு கவ்விக்கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடி காட்சி அளித்தார். பின்பு அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணை கலசத்தில் சேகரிக்கப்பட்டு கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் மயான பூஜைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான  குண்டம் இறங்கும் நிகழ்வு வருகின்ற திங்கட்கிழமை ஆறாம் தேதி காலை நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar