Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை முனீஸ்வரர், ஜக்கம்மாள் ... ஈஷாவில் மஹா சிவராத்திரி : ஆன்லைன் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம் ஈஷாவில் மஹா சிவராத்திரி : ஆன்லைன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப உத்ஸவம் பிப். 26ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப உத்ஸவம் பிப். 26ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2023
05:02

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் துவங்குகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும்.  பிப்.25 மாலை 6:00 மணிக்கு , சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. பிப்.26 காலை 7:30 மணிக்கு பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு புறப்பாடாகி சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் பூஜைகள் நடந்து காலை 10:36 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.  மாலையில்   காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை, வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். 6ம் திருநாளில் மாலையில் சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். மார்ச் 6 ஒன்பதாம் திருநாள் காலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  காலை 10:00 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும். தெப்பத்தை முன்னிட்டு தி.வைரவன்பட்டி தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar