வாடிப்பட்டி: கச்சைகட்டி பெரியார் நகர் வீரக்கள்ளன், சொக்கன்கூட்டம் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்புசாமி, குன்றுமலை முருகன் கோயிலில் 10ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமியை பக்தர்கள் வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.