Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரும்பு தொட்டில் நேர்த்திகடன் செல்வாக்கு மிக்க உயர் பதவியும், ...
முதல் பக்கம் » துளிகள்
பொறாமையால் ஏற்படும் தீங்கு என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
01:02


கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே... என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு... என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது.

அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு, அரண்மனை வாழ்வு, ஆள், அம்பு, சேனை, ராஜபோகம், பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இருந்தன. திருதராஷ்டிரன் தம்பியான பாண்டுவின் மனைவி குந்தியோ, காட்டில் ஒரு வசதியும் இல்லாத சூழலில் வசித்து வந்தாள். இந்நிலையில், குந்திதேவிக்கு, காந்தாரிக்கு முன்னரே, குழந்தை பிறந்து விட்டது. இச்செய்தி, நாட்டில் வாழ்ந்த காந்தாரிக்கு தெரிந்ததும், அவளுக்கு பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் பொறாமைத் தீ, எரிமலை குழம்பாய் வெடித்து, வழிந்தது. அதன் விளைவாக, காந்தாரி, ஒரு அம்மி குழவியைக் எடுத்து, தன் வயிற்றில் இடித்துக் கொண்டாள். அவள் கரு சிதைந்து, ரத்தம் கலந்த சதை கூறுகளாக சிதறின.

வியாசர் அந்தச் சதை கூறுகளை, நூற்றியொரு குடங்களில் இட, துரியோதனன் முதலான நூறு பேர்களும், துச்சலை என்ற ஒரு பெண்ணும் உருவாயினர். காந்தாரியின் இத்தகைய பொறாமை குணத்தின் காரணமாகவே, கவுரவர்களும் இயல்பிலேயே பொறாமை குணம் படைத்தோராக விளங்கி, பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமையால் அழிந்தனர். நாம் யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ, அவர்களுக்கு ஒன்றும் நேராது; பொறாமைப்பட்ட நமக்குத்தான் கேடு விளையும். எனவே, பொறாமையை மனதிலிருந்து துரத்தி, நற்சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். நடப்பவை, நல்லனதாகவே அமையும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar