Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூரத்தாழ்வான் கோவிலில் புஷ்ப ... புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 6ம் ஆண்டு பூர்த்தி விழா புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரியில் மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரியில் மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
01:02

கர்நாடக மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.

வராஹமாக அவதரித்த மகாவிஷ்ணுவின் பற்களில் இருந்து தோன்றிய துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, சிருங்கேரி திவ்ய ஷேத்ரம். ஆதிசங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது, சிருங்கேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா பீடம். சிருங்கேரி நகரின் நடுவில், சிறிய குன்றின் மேல் புராதனமான ராமாயண காலத்தில் இருந்தே பவானி அம்பாள் சமேத மலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. விபாண்டக மகரிஷி தவம் செய்த இடமானதால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. 35வது பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமி, ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமியுடன் இணைந்து, 1985ம் ஆண்டில், கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

இங்கு தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ மலஹானிகரேஸ்வரர், பவானி அம்பாள் சன்னதியின் கோபுரங்களுக்கு, நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகளும், அவரது சீடரான ஸ்ரீ விதுசேகர பாரதியும் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரை, 1008 சஹஸ்ர கலசாபிஷேகத்தை, ஸ்ரீ விது சேகர பாரதி சுவாமிகள் நிகழ்த்தினார். இதையொட்டி அவர் எழுதி உள்ள, மலஹானி கரேஸ்வர அஷ்டகம் எனும் புதிய ஸ்தோத்திரமும் குழுவாக பாராயணம் செய்யப்பட்டது. சுவாமிக்கு புதிய தங்கத்தில் கட்டப்பட்ட முத்துமாலையும், சிவ அஷ்டோத்தரம் பொறித்த தங்க காசு மாலையும் சமர்ப்பிக்கப்பட்டது. மாலையில், பொது நிகழ்ச்சிகள் நடந்தன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சீடர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கும்பாபிஷேகம் முடிந்த பின் உரையாற்றிய ஸ்ரீ ஸ்ரீ மகா சன்னிதானம் இந்த புராதனமான கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் இத்திருநாள் ஒரு புனிதமான நாளாகும் என்று கூறி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கும்பாபிஷேக விழா சிறப்பு ஏற்பாடுகளை மடத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரி சங்கர் செய்திருந்தார். ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளையும், கோவில் குறித்த ஆவண படத்தை, sringeri.net என்கிற தளத்தில் காணலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar