காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2023 03:02
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாற்றங்கள் பல்வேறு புதுமைகளை கோயில் நிர்வாகம் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் விழா இன்று சிவன் கோயில் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நடக்கும் 13 நாட்களிளும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடப்பதால் நகரை அழகுப் படுத்தியுள்ளனர்.ஊர்வலத்தின் போது முன்னதாக சாலைகளை தூய்மை படுத்தப்பட்டு தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் . ஆனால் கோயிலில் மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறலாம். இந்நிலையில் கோயிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிருத்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகத்தில் ஈடுபடுவதை ரத்து செய்யப்படுவதோடு கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது .வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு சமயங்களிலும் சுவாமி அம்மையார்கள் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அச்சமயத்தில் பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரினார். கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ சமயத்தில் ரத்து செய்வது வழக்கம்.ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி பாவத்துடன் ஈடுபடும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும் இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இதனை பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.