Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷாவில் கோலாகலமாக துவங்கிய யக்ஷா ... தமிழகத்தில் 32 இடங்களில் ஈஷா மஹா சிவராத்திரி விழா தமிழகத்தில் 32 இடங்களில் ஈஷா மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரியில் சிவராத்திரி வழிபாடு : பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரியில் சிவராத்திரி வழிபாடு : பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

பதிவு செய்த நாள்

16 பிப்
2023
10:02

கோவை : மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை (17ம் தேதி) முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில், ஏழாவது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, மூன்று மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை முதல் 20ம் தேதி வரை, பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு புனிதப்பயணம் செல்ல உள்ளனர். மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க, வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,சிவராத்திரியன்று ஒரு லட்சம் பக்தர்கள் மலை ஏற வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே, மலை ஏற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, வனப்பகுதியில் கொண்டு செல்லக்கூடாது என்றனர்.

பிளாஸ்டிக் தவிர்க்க முன்பண திட்டம்: வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்திற்குள் வீசுவதை தவிர்ப்பதற்காக, வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது, கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக 20 ரூபாய் பெறப்பட்டு விடும். மலைக்கு சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்துவிட்டு, அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar