Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் ... சதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்? சதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு ...
முதல் பக்கம் » துளிகள்
தக.. தக..வென ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் தங்கக் கோபுரங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2012
03:09

நான்கு பக்கங்களிலும் 8 யானைகள், 32 சிங்கங்கள், 64 பூதங்கள்  தாங்கும் அதிசயமும், ஆச்சரியமும் ஒரு சேர பார்க்க வேண்டுமானால், நமக்கு கழுகு பார்வை அவசியம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விமானத்தில் பறந்து பார்க்கும் போது, அந்தக்கோபுரங்கள் மட்டும் நிச்சயம் தக... தக...வென ஜொலிக்கும். அது மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரரின் மூலஸ்தான தங்க கோபுரங்கள்.இதில், சுவாமியின் மூலஸ்தானமான தங்கக்கோபுரத்தைத் தான், யானைகள், சிங்கங்கள், பூதங்கள் தாங்குவது போல் கலைநயத்துடன் வடிவமைத்து இருக்கின்றனர். இதற்கு இந்திரவிமானம் என்று பெயர். பாதுகாப்பு கருதி, தற்போது இதை கோயில் மாடிக்கு சென்று தரிசிக்க அனுமதியில்லை. இதனால், நாமும் பாதுகாப்பு கருதி, இந்த மேட்டரை இத்துடன் முடித்துக் கொண்டு, கீழ்த்தளத்தில் உள்ள சுவாமி சன்னதிக்கு செல்வோம். சன்னதி வாசல் இருபுறமும் 12 அடி உயரமுள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட துவார பாலகர்களின் சிலைகள் நம்மை வரவேற்கின்றன. இச்சிலைகள் நான்கரை அடி பீடங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே தூணில், 5 தலையுடைய சிவபெருமான், பார்வதி வீற்றிருக்கும் காட்சியை காணமுடிகிறது. அடுத்து நம்மை வரவேற்பது, 3 நிலைகள் உடைய சுவாமி சன்னதி கோபுரம். இதை கி.பி. 1168ல் கட்டியவர் குலசேகரபாண்டியன். இதனுள் ஆறுகால் பீடம் உள்ளது. இங்கு தான் பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்டது. ஆறுகால் பீடத்தில் உள்ள செப்பிலான துவாரபாலகர் சிலைகளை செய்து கொடுத்தது மன்னர் திருமலை நாயக்கர். சுவாமி மகா மண்டபத்தின் சுற்று மண்டபத்தில் வடக்கு பிரகாரத்தில், சித்தர் சன்னதி உள்ளது. இது 1960-63 திருப்பணியின்போது, சீரமைக்கப்பட்டது. சிதலமடைந்த சித்தர் உருவமும் சீர்செய்யப்பட்டது. மதுரை உருவாவதற்கு முன், கடம்ப வனமாக இருந்ததற்கு சாட்சியாக, இம்மண்டபத்தில் ஆதி கடம்ப மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. - ஆர்.கே

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar