Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மகா சிவராத்திரி : எம பயம் நீங்க ... குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடங்கியது குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம் முழுவதும் சுற்றி வந்த ஆதியோகி தேருக்கு உற்சாக வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகம் முழுவதும் சுற்றி வந்த ஆதியோகி தேருக்கு உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

18 பிப்
2023
09:02

தொண்டாமுத்தூர்: தமிழகம் முழுவதும் சுற்றிவந்த ஆதியோகி தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகளுக்கு, ஈஷா யோகா மையத்தில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை, சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் கொண்ட தேரையும், சென்னையில் இருந்து பக்தர்கள், கோவை ஈஷா யோகா மையம் வரை பாதயாத்திரையாக இழுத்து வந்தனர். இதில் முக்கிய அம்சமாக, 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகளுக்கென பிரத்தியேகமாக 63 பல்லக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சிவ பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து பாதயாத்திரையாக, 28 நாட்களில், 7 மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, 640 கி.மீ., கடந்து, நேற்று ஈஷா யோகா மையத்தை அடைந்தனர். அங்கு, தேருடன் பாதயாத்திரையாக வந்தவர்களை, கிராம மக்கள் மேளதாளங்களுடன் வரவேற்றனர்.  ஈஷா யோகா மையத்திற்கு வந்த 63 நாயன்மார்களின் திருமேனிகளை, ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், மலைவாழ் மக்கள் என அனைவரும், தனி பல்லக்கில் ஏற்றி, தங்களது தோள்களில் சுமந்து ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை வலம் வந்தனர். இதை தவிர, பெங்களூரு, நாகர்கோவில், புதுக்கோட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்தும், ஆதியோகி தேருடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். இந்த பாதயாத்திரை, ஈஷா யோகா மையம் வந்தபின், வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துடன் நிறைவடைகிறது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அனைவரும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar