Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ... ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 55வது ஜெயந்தி விழா விமரிசை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா : கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்திரகாளியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா : கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

பதிவு செய்த நாள்

19 பிப்
2023
09:02

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில் கொதிக்கும் நெய்யியில், 90 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பங்கள் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.


இக்கோயிலில் மகா சிவராத்திரி அன்று இரவு கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு, அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. அதன்படி சிவராத்திரி நாளான நேற்று இரவு 11:30 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டி முத்தம்மாள் அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து தன் நெற்றியிலும், கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் திருநீருடன் கலந்து பூசினார். இதன்பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டையை மிதக்க விட்டு, அதனை கையால் எடுத்து பனை ஓலை பெட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் உடனிருந்தனர். பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, சென்னை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். சுமார் நூறாண்டு பாரம்பரியமிக்க இந்நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடுவது பக்தர்களை பரவசப்படுத்தியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar